Tuesday, February 11, 2014

மகாபாரதப் பிரசங்கியார் விருது விழா

"நல்லாப்பிள்ளை பாரதம்" இரு பாகங்களாகப் பதிப்பித்த நண்பர் இரா.சீனிவாசன் வருடந்தோறும் மகாபாரத பிரசங்கியார் கூடும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து மகாபாரத சொற்பொழிவாளர்கள் அவர்களுக்குள் விருது வழங்கி சிறப்பித்துக்கொள்ள வகை செய்து வருகிறார். மகாபாரத பிரசங்கிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடும் அபூர்வமான நிகழ்வு இது.  மகாபாரதம் தெருக்கூத்தில் முழுமையாக பாரதக்கூத்தாக நிகழ்த்தப்படும்போது மகாபாரத சொற்பொழிவாளர்கள் பாரதத்தை விரிவாகக் கதையாகச் சொல்வர். பின்னர் இரவு முழுக்க கூத்து நிகழ்த்தப்படும். பாரதப் பிரசங்கிகள் மிகப் பிரமாதமான கதை சொல்லிகள். அவர்களுடைய கலை இன்னும் தமிழகத்தில் கவனம் பெறாமல் இருக்கிறது.
இந்த ஆண்டு " ஶ்ரீ மகாபாரதம் பாடிய வில்லிபுத்தூரார் விழா' கொசப்பாளையம் ஆரணியில் 15-2-2014 அன்று ஶ்ரீ பாஞ்சாலி அம்மன் திருமணமண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. அந்த விழாவிற்காக நண்பர் இரா.சீனிவாசன் அனுப்பித் தந்த அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு மகாபாரத கதைசொல்லல் எப்படி உயிர்ப்புடன் நாட்டுப்புறக்கலையாக மேலோங்கியிருக்கிறது என்பதினை அறியலாம்.






No comments: